Suganthini Ratnam / 2017 ஜனவரி 03 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
யார் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், மார்க்க ரீதியான விடயங்களை முன்னெடுக்கும்போது, அதற்கு அரசியல் காரணங்கள் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவி;ததார்.
காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் ஜமாஅத்தார் அமைப்புக்கு தளபாடங்களை வழங்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (02) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,
'எமது ஊரிலுள்ள அமைப்புகள் சுயாதீனமாகவும் அவர்களது கருத்துகளை சுதந்திரமாகவும் வெளியிடக்கூடிய நிலைமை உருவாக வேண்டும். அதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது.
மார்க்க விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய முடியாது. மார்க்க விடயங்கள் தவிர்ந்த ஏனைய எந்த விடயங்களாக இருந்தாலும், சமூகத்தின் ஒற்றுமைக்கு முடியுமானவரையில் விட்டுக்கொடுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் மனப்பக்குவம் எம் அனைவரிடமும்; இருக்க வேண்டும்' என்றார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago