Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மார்பகப் புற்று நோய்கள் மற்றும் இன்ன பிற தொற்றா நோயங்கள் பற்றி பெண் உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
அலுவலகங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் குறிப்பாக ஆசிரியைகளிடத்தில் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதன் காரணமாக இத்தகைய மார்பகப் புற்று நோய்க்கும் இன்ன பிற தொற்றா நோய்களுக்கும் பெண்கள் ஆளாகும் வீதம் அதிகரித்திருப்பதாலேயே இந்தநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்ததாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
கல்வி கற்ற பெண்களுக்கூடாக இந்த மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு சமூகத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுததவதாக தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் விஜி திருக்குமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம். திருக்குமார், அம்பாறை வைத்திய சாலையின் புற்று நோயியல் வைத்திய நிபுணர் ஏ. இக்பால் மற்றும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் ஆகியோர் மார்பகப் புற்று நோய் உட்பட இன்னபிற தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வையும் முன் எச்சரிக்கை அறிவுரைகளையும் வழங்கினர்.
இக்கருத்தரங்கில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெண் உத்தியோகத்தர்கள், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago