Niroshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான அஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்குமாறு கோரி நேற்று திங்கட்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீறாவோடையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம். உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கல்குடா இளைஞர் அமைப்பு தலைவர் எச்.எம்.நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி மீறாவோடை றிழ்வான் பள்ளிவாயல் சந்தியில் இருந்து ஆரம்பமாகி மீறாவோடை ஓட்டமாவடி எல்லை வீதி வரை சென்றது.
22 minute ago
36 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
4 hours ago
4 hours ago