Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஏறாவூர்ச் சாலையில்; கடமையாற்றும் மேலதிக ஆளணியினரை ஏனைய சாலைகளுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணித்துள்ளார்.
ஏறாவூர்ச் சாலைக்கு போக்குவரத்து அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (11) விஜயம் செய்து இங்கு கடமையாற்றும் ஆளணியினரின் விவரங்களை அறிந்துகொண்டார். இந்நிலையில், இங்கு கடமையாற்றும் ஆளணியினரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதால், அமைச்சர் இவ்வாறு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண போக்குவரத்துச்சாலை பிரதம பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
தற்போது, ஏறாவூர்ச் சாலையில் 20 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இந்தச் சாலையில் 30 சாரதிகளும் 37 பஸ் நடத்துநர்களும் கடமையாற்றுகின்றனர். இந்நிலையில் மேலதிகமாகவுள்ள சாரதிகளையும் பஸ் நடத்துநர்களையும் ஏனைய சாலைகளுக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சர் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago