Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ரணவிரு சேவா' அதிகார சபையால் தமிழ், முஸ்லிம், சிங்கள ரணவிரு குடும்பங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் பூரணப்படுத்தலை படை மற்றும் அதிகாரிகள்,இன்று (23) நேரில் சென்று பார்வையிட்டனர்.
ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தலைமையில் சென்ற குழுவில் வாகரைப் பகுதி இராணுவ அதிகாரி நதுன் குருவிற்றகே, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் ஆகியோர் உட்பட அதிகாரிகளும் இந்தக் கள மேற்பார்வை விஜயத்தில் பங்குபற்றியிருந்தனர்.
வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 'ரணவிரு சேவா' பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான இந்த வீட்டு நிருமாண வேலைகள் தற்போது நிறைவுற்றுள்ள நிலையில் அவற்றை பயனாளிகளிடம் இம்மாத இறுதிக்குள் கையளிக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago