2025 மே 23, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி ட்ரக் விபத்து; இருவர் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 09 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாபுரம் ரயில் நிலையம் அருகில் ரயில் கடவையில் இன்று காலை 7.20 மணியளவில் ட்ரக் வாகனமொன்று,  ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பேக்கரிப் பொருட்களை விற்பனை செய்யும் ட்ரக் வாகனமும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒயில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் ரயிலுமே இவ்விபத்தில் மோதுண்டுள்ளன.

இவ்விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவரும் அவருக்கு உதவியாளராகச் சென்ற சித்தாண்டியைச் சேர்ந்த எஸ். நிரோஷன் (வயது 18)‪ என்பவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இடம்பெறும்போது, தேவபுரம் கடவையில் காவலாளிகள் எவரும் கடமையில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X