2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வட்டுவான் நீரோடையிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வட்டுவான் நீரோடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று (11) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வாகரை, மாங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் தேவராசா (வயது 41)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

வழமை போன்று கடந்த 9ஆம் திகதி தனது வீட்டிலிருந்து  மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற இவர், காணாமல் போயுள்ளார். 

இது தொடர்பில் வாகரை பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்த நிலையில், அவரைத் தேடியதாகவும் இந்நிலையில்  அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .