2025 மே 08, வியாழக்கிழமை

வந்தாறுமூலை பல்கலையில் நினைவஞ்சலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மீரியபெத்த மண்சரிவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள  பல்கலைகழக கலைகலாசார பீட கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

'மறைந்தவர் மறைவழி சந்தி பெறவும் மரணத்துயரினால் மலைத்து நிற்கும் குடும்பம் மனக்கவலை நீங்கி நிம்மதி பெற்றிடவும் மரணித்தவர் ஆத்மா சந்திபெறவும் பிரார்த்திக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் மீரியபெத்த மக்களுக்கான முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுச் சுடர் தீபமும் ஏற்றப்பட்டது.

இதில்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் மு.ரவி மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X