2025 மே 08, வியாழக்கிழமை

வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு வீதிநாடகமும் பேரணியும்

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி; கவனயீர்ப்பு வீதிநாடகம் மற்றும் பேரணி என்பன நேற்று வெள்ளிக்கிழமை (11) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட மகளிர் அதிகார சபை மற்றும் பால் நிலை வன்முறையைக் குறைக்கும் செயலணி ஆகியவற்றின்  ஏற்பாட்டில் 'அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்' எனும் தொனிப்பொருளில் இந்த வீதி நாடகம் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலிருந்து ஆரம்பமான பேரணி கொக்கட்டிச்சோலை சந்திவரை சென்றது. தொடர்ந்து சூரியா பெண்கள் அமைப்பினரால் வீதி நாடகமொன்று இடம்பெற்றது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி எம். ரகுமான், களுவாங்சிக்குடி உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிகரன், பட்டிப்பளை பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செ. பிரபாகரன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X