2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வயல்வெளியில் ஆயுதங்கள் மீட்பு

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள “நூறு ஏக்கர் தவனைக்கண்டம்” என அழைக்கப்படும் வயல்வெளிப் பிரதேசத்தில், இன்று (06) காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, எல்.எம்.ஜீ-01. ரி56 வகைத் துப்பாக்கி 01 என்பன மீட்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர், நேற்று (05) மாலை, தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது, மர்மப்பொருள் தென்பட்டதையடுத்து, வாழைச்சேனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு இன்று காலை சென்று பார்வையிட்ட பொலிஸார், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி, அவற்றை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X