Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை பிரதேசத்தில் நேற்று (01), காணாமல் போன வயோதிப பெண், கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து இன்று (02), சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பேத்தாளை விபுலானந்தா பாடசாலை வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நாகமுத்து (85), என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 09.00 மணியளவில், வீட்டிலிருந்து வெளியான குறித்த நபர், மதியம் வரை வீடு திரும்பாத நிலையில், இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறத்த பெண்ணின் சடலமானது, கருங்காலிச்சோலை ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர்கள் மூலம், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago