2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வருடாந்த பரிசளிப்பு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
சங்கத்தின் தலைவர் வி.சபேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா,ஆரையம்பதி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.இராசமணி லதாகரன், ஓய்வு நிலை அரசாங்க அதிபர் சி.சண்முகம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் மூ.கோபாலரெட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,பல்கலைக்கழகத்துக்கு தெரிவான, புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற, சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் செ.மோகன், கல்முனை பெண்கள் அபிவிருத்தி நிலைய இணைப்பாளர் ருத்சந்திரிக்கா ஆத்மராஜா, ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ப.புவனசிங்கம், சமூக சேவையாளர் வ.பிறேமஜயந்தன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X