Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, பூநொச்சிமுனை, அமீர்அலி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்கள் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகளைத் தைத்துக் கொள்வதற்கு இயலாத வறுமையில் இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைத் துணிகளைத் தைத்துக் கொடுக்கும் செலவை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், திங்கட்கிழமை(08) பாடசாலை நிருவாகத்திடம் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் குறைபாடுகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்த அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மூலமும் பாடசாலையிலுள்ள குறைநிறைகளை அவர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்புகளை பெற்றுக் கொள்வதற்குரிய முழு செலவீனங்களையும் இப்பாடசாலையில் காணப்படுகின்ற தளபாட பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக 2016ஆம் வருடத்தின் மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாவினை வழங்குவதாகவும் அவர் பாடசாலை நிருவாகத்திடம் வாக்குறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago