2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வலைக்குள் சிக்குண்டு மீனவர் பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 13 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மீன்பிடிக்க சென்ற நபரை காணவில்லை என்று இன்று (13) காலை அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகள் இருவரும் தந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டுவந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .