கனகராசா சரவணன் / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 09 வயதுச் சிறுவனுக்கு குருதி மாற்றியேற்றியதில் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ. றிஸ்வான் கட்டளையிட்டார்.
குறித்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் தவறியமையால் இவ்வழக்கினுடைய தொடர் விசாரணைகளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளவும் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு, நீதவான் கட்டளையிட்டார்.
இவ் வழக்கில் உயிரிழந்த சிறுவனின் இரத்த மாதிரி 0 பொசிற்றிவ் என்றும் அவருக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ள இரத்த மாதிரி ஏபி நெக்கட்டிவ் என்பதும் தகுதியான ஆவணங்கள், சாட்சியங்கள் மூலம் தமது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மன்றில் மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .