2025 மே 07, புதன்கிழமை

வழிப்பிள்ளையார் சிலை விஷமிகளால் உடைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விஷமிகளால் நேற்றுக்காலை உடைத்தெரியப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;

நேற்று இரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.  

இப் பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விஷமிகள் யாராக இருந்தாலும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமாகசெயற்பாட்டை  செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர்   தெரிவித்தனர். செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அன்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்படுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X