Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.சக்தி
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விட்டால் மங்களகம, கெவுளியாமடு கிராமங்களைப் போல் தமது பிரதேசங்களும் பறிபோகுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சாணக்கியன் எச்சரித்தார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் இல்லையென்றார்.
இந்நிலையில், தொல்பொருள்கள் விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.
கரையோரப் பகுதியைத் தங்களுக்குப் பறித்தெடுக்கும் முகமாகவே, இந்தத் தொல்பொருள் செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், சாணக்கியன் மேலும் எச்சரித்தார்.
25 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
2 hours ago