Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு வானொன்றில் சட்டவிரோதமாக 65 போத்தல் மதுபானங்களை கடத்திச் சென்ற போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர், கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் வைத்து நேற்று (11) கைதுசெய்யப்பட்டள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானை சோதனை செய்த போது, அதில் உரைப்பைகளில் மதுபான போத்தல்களை கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த வானில் பொலிஸ் சீருடையில் இருந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர், வான் சாரதி ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், 65 போத்தல் மதுபானங்களையும் வானையும் கைப்பற்றியதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் கடையொன்றில் இருந்து குறித்த வானை, ஒருவர் மூலம் ஒருவராக கைது செய்யப்பட்ட 3ஆவது நபர், பொலிஸாருக்கு அரிசி ஏற்றி கொண்டு வருவதற்கு என வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வானை வடைகைக்கு எடுத்துச் சென்று, குறித்த போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து, இந்த சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
38 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026