2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாரத்துக்கு எட்டு டெங்கு நோயாளர்கள்

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில், கடந்த ஒரு வாரத்தில், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாகக் காணப்படுவதாக, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

மேற்படி பிரிவில், இவ்வாண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை 189 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செப்டெம்பர் மாதம் 14 பேரும் அதில் கடந்த வாரம் மாத்திரம் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பாடசாலை மாணவர்கள் ஆறு பேர் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை, ஓட்டமாவடியில் அதிகரித்து வரும் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில், பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X