Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
கோஷ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் பலியானதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது உறவினர்களான இருவரும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயமொன்றே, கோஷ்டி மோதலாக மாறி பின்னர் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago