Freelancer / 2023 ஜூன் 05 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் ஹிழ்ரியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பட்டின் கீழ், பள்ளிவாசலில் கடந்த 04ஆம் திகதி இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
"நாட்டில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பெறுமதி மிக்க உயிர்களை காப்போம் "என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த இரத்ததானம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் - யுவதிகள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
மேலும், இது போன்ற சமூக சேவைத் திட்டங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் என்பன இந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)

39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago