2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைச்சேனையில் கடும் கட்டுப்பாடுகள்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து,  அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம், செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தலிலுள்ள வீடுகளுக்கு வெளியில் பூட்டுப் போட்டு வைத்தல், வெளியில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்புதல், மரண வீடுகளில் நல்லடக்கத்தில் 15 பேர் மாத்திரம் கலந்துகொள்ளல், திருமணங்களை மறு அறிவித்தல் வரை பிற்போடல், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் ஐவர் கொண்ட குழு நியமித்து கண்கானிப்பில் ஈடுபடல்.

பிரதேச சபையால் பெறப்படும் குப்பைகள் பைகளில் இடப்பட்டு வீதியோரமாக வைத்து விடல், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கண்காணிப்பு தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் உறவினர்கள், அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமைகள் இன்னும் மோசமடையும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டோர் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், இவர்கள் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .