Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 06 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று- வாழைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இன்று (6) நடைபெற்றது.
சபையின் தவிசாளரக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த திருமதி என். ஸாபா ஜெயரஞ்சித் , உப தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் ஆகியயோர் தெரிவு செய்யப்பட்டனர்
உப தவிசாளர் தெரிவில் இரண்டு பேர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சினை சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெட்ணம் கமலநேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தர்மலிங்கம் யசோதரன் 12 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணகரெட்ணம் யசோதரன் 09 வாக்குகளையும் பெற்றனர்.
தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்றது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் 2 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிருஸ்ணப்பிள்ளை சேயோன் 09 வாக்குகளும் அளிக்கப்பட்டது. சபையின் வாக்கெடுப்பில் நல்லாட்சிக்கான தேசியமுன்னனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் நடு நிலை வகித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago