2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைச்சேனை மக்களுக்கு படையினரால் இறுதி எச்சரிக்கை

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும், கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நியமிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும்,  விழிப்பூட்டவும் அயராது செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, குறித்த பகுதியில் உள்ள மக்களின் அலட்சியத் தன்மை காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று, அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்புப் படையினர் இறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .