2025 மே 19, திங்கட்கிழமை

வாவியின் தூய்மையை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு வேலைத் திட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 01 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நமது குப்பையை முகாமைத்துவம் செய்து நமது சூழல் மற்றும் வாவியின் தூய்மையை உறுதிப்படுத்துவோம்” எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு வாவியைத் தூய்மையாகப் பேணும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கும் கரையோரங்களில் நேற்று(31)​ ஆரம்பித்து வைக்கப்பட்டது என, ஸ்ரீலங்கா 'ஷெட்' நிறுவனத்தின் (Sri Lanka SHED Foundation) தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

 

நகரமய நெருக்கடியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் சவால்களைச் சந்தித்து வருவதுடன் நமது சூழல், நிலம், நீர், வளி என்பனவும் அசுத்தமடைந்து வருகின்றமையால் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தினை விநோதமாக, வாவிக்கரைப் பூங்காவிற்கு வருகை தரும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் இனிப்பு மிட்டாய் வழங்கி அதன் கடதாசியை குப்பைத் தொட்டியில் இடச் செய்த பின்னர் சிறுமிகளுக்கு  கூந்தல் அலங்காரக் கட்டு நாடாவும், வளர்ந்தோருக்கு திண்மக் கழிவு முகாமைத்துவ பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X