2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விசேட கலந்துரையாடல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 21 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் , இன்று(21) சந்தித்துக் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசச் செயலக டேர்பா மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, அரச சார்பற்ற நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு தொடர்பிலும் சகவாழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தன.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் முன் வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு, அமைச்சர் மணோகணேசன் அவ்விடத்திலேயே தீர்வுவகளை வழங்கினார்.

சுகவாழ்வு மன்றங்களை உருவாக்குதல், முன்னாள் போராளிகள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X