Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் நன்மை கருதி சேவை செய்யும் நோக்கில், ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் விசேட ஒன்றுகூடல், இன்று(4) இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.எஸ்.எம்.வசீம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வெதுப்பக உரிமையாளர்கள், பல்பொருள் உரிமையாளர்கள், மக்களின் நலன்கருதி பொருட்களை வாகனங்களின் மூலம் நடமாடும் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபையால், வியாபார அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று விசேட ஒன்றுகூடலில் தெரிவிக்கப்பட்டது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago