2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான செயன்முறை நிகழ்ச்சித் திட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக செயன்முறைப் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ரீ.ஞானசேகரன் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய கோட்டக் கல்விப் பிரிவு மாணவர்களுக்கான செயன்முறைப் பயிற்சிப் பட்டறை, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் இன்று (17)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், ஆகிய பாடவிதானச் செயற்பாட்டுப் பயிற்சிகளும் கண்காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அங்குரார்ப்பண நிகழ்வில், கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.தில்லைநாதன், உப அதிபர் நாகலிங்கம் இராசதுரை உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X