Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைமாணி பட்டப்படிப்புகளுக்கு செய்முறைத் திறன்காண் பரீட்சைக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத் திகதி, இம்மாதம் 12ஆம் திகதி மாலை 4 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019/ 2020ஆம் கல்வியாண்டுக்கான கர்நாடக சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புல தொழில்நுட்பக் கலைகள் நுண்கலைமாணி பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைத் தெரிவுசெய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சைக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத் திகதியே நீட்டிக்கப்பட்டுள்ளது.
இச்செய்முறைத் திறன்காண் பரீட்சை தொடர்பான விவரங்களை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இணையத்தளத்தில் (www.svias.esn.ac.lk) பார்வையிட முடியும்.
மேலதிக விவரங்களுக்காக சிரேஷ்ட உதவிப் பதிவாளரை 065-2222663 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.
25 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
1 hours ago