2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் உடல் கருகி மூவர் பலி

Editorial   / 2019 மார்ச் 30 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடராஜன் ஹரன், கனகராசா சரவணன், க. விஜயரெத்தினம், பேரின்பராஜா சபேஷ், 

மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில், நேற்று (29) இரவு, மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒன்றோடொன்று மோதிக்கொண்​டதில், மூன்று வாலிபர்கள், உடல் கருகி பலியாகியுள்ளனர்.

மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

ஒரே திசையிலிருந்து, இரண்டு மோட்டார் சைக்கிள்களில், நான்கு இளைஞர்கள் வேகமாக வந்துள்ளனர். இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டபோது, எரிபொருள் தாங்கி வெடித்து தீப்பற்றியுள்ளது. இதன்போது, குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலும், இந்த விபத்துக்குள் சிக்கியுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு - பலாச்சோலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோகநாதன் மயூரன், 23 வயதுடைய முருகப்பிள்ளை பவித்திரன், காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதான எம்.ஏ. எம். அத்தீப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .