Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 26 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காஞ்சிரங்குடா பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது அதி வேகமாகச் சென்ற கன்ரர் வாகனம் மோதியதில் சிறுமி படுகாயமடைந்து, மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் விளைவாக, அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டது.
அதனையடுத்து, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலிருந்து கலகமடக்கும் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
12 வயதுச் சிறுமியொருத்தி, பொருட்கள் வாங்கிவருவதற்காக காஞ்சிரங்குடா வீதியால் சைக்கிளில் கடைக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், மண் ஏற்றிய நிலையில் அதிவேகமாக வந்த கன்ரர் வாகனம், சிறுமி மீது மோதியுள்ளது.
சம்பவ இடத்தில் சூழ்ந்துகொண்ட பிரதேசமக்கள், சிறுமியை மீட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பித்ததுடன், சிறுமியை விபத்துக்குள்ளாக்கி காயமேற்படுத்திய கன்ரர் வாகனத்தையும் சேதப்படுத்த முயற்சித்த வேளையில் அங்கு விரைந்த பொலிஸார், அதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.
அவ்வேளையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் ஏற்படவே, கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய கன்ரர் வாகனத்தை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்பதுடன், சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.
மேலும், அப்பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் பற்றி, கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
54 minute ago
58 minute ago
3 hours ago