2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் உயிரிழப்பு

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரானில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 49 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான், கோரகல்லிமடுவில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண், லொறியொன்றால் மோதப்பட்டு, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம், கிரான் சந்தியில் சடலமாகவே மீட்கப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி தப்பிச்சென்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X