Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 மே 31 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தையொட்டி மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வூட்டல் செயலமர்வும் மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை (31) நடைபெற்றது.
நகர சபையின் செயலாளரும் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தருமான எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நகர சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன் விழிப்புணர்வுச் செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டது.
நகர சபையின் ஊழியர்கள் இந்நிகழ்வில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். புகையிலைப்பாவனை மற்றும் புகைத்தல் போன்ற செயற்பாடுகளினால் உடற்சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
5 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
50 minute ago
56 minute ago