Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 ஜூன் 28 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்படும் நீர்ப்பெருக்கம் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் எனவும் ஆற்றுவாய்களை வெட்டுவதற்கு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி, போரதீவுப்பற்று, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆறுப் பெருக்கெடுத்ததன் காரணமாக விளைச்சலுடன் காணப்பட்ட நெற்செய்கைகள் நீரில் மூழ்கியுள்ளன.
அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைகுளத்தின் வான்கதவுகள் திடீரெனத் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே, ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக நெற்செய்கை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன், தற்போது அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் தோணியைக்கொண்டே அறுவடைசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நீரில் உள்ள வேளாண்மையை அறுவடைசெய்து முடியும் வரையில் வழமையான செலவையும் விட மூன்று மடங்குக்கு அதிகமான செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலமை காரணமாக 4,000 ஏக்கருக்கு மேல் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு முகத்துவாரம் ஊடாக ஆற்றுவாயை வெட்டி, மேலதிக நீரை கடலுக்குள் வெளியேற்றுவதன் மூலமே, தம்மை ஓரளவு பாதுகாக்கமுடியுமெனத் தெரிவிக்கும் விவசாயிகள், இது தொடர்பில் மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல தரப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோதிலும் யாரும் கருத்தில்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
3 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
10 minute ago