2025 மே 07, புதன்கிழமை

வீடுகளில் கொள்ளை; இருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டர் சைக்கிளைப் பயன்படுத்தி, வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்டு வந்த இரு சந்தேகநபர்களை, காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக, அப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எம்.முஹமட் தலைமையிலான பொலிஸ் குழுவினர், இன்று (27) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையிடப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், 34 ஆயிரம் ரூபாய் பணம், அலைபேசி ஆகியன கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள், மஞ்சந்தொடுழுவாய், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடுகளை உடைத்து பணம், பொருள்களைக் கொள்ளையிட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X