2025 மே 09, வெள்ளிக்கிழமை

வீடுகளைப் புனரமைக்க காசோலைகள் வழங்கப்பட்டன

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், சுழல் காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் புனரமைப்பதற்கு முதலாம் கட்டமாக தலா 10,000 ரூபாய் காசோலைகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமாரால், கரடியனாறு பிரதேசத்தில் வைத்து, இன்று (10) வழங்கப்பட்டன.

ஏப்ரல் 01ஆம், ஓகஸ்ட் 16ஆம் திகதிகளில் வீசிய பலத்த சுழல் காற்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

இவற்றுக்கான நிவாரணப் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு, மாவட்டச் செயலாளரின் பணிப்புக்கமைய, தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினூகூடாக 1.6 மில்லியன் ரூபாய் நிதி உடனடியாக விடுவிக்கப்பட்டு, இச்சுழல் காற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டன.

இதேவேளை, மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான மதீப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் இரண்டாம் கட்டமாக முழுமையான நிதியை வழங்க, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தீர்மானித்துள்ளது.

கிரான், வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களே, மேற்படி சுழல் காற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களாகும் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X