2025 மே 19, திங்கட்கிழமை

வீதி விபத்தில் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 30 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகரில் இன்று(30) காலை இடம்பெற்ற வீதி விபத்தில், அரசியல் கட்சியொன்றின் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில், ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் (போட்டியிடும் எம். ஜவாஹிர் (வயது 30) என்பவரும் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த  எம். ஹனிபா  (வயது 59) என்பவரும் படுகாமயடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வேட்பாளருக்கு சிரசில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால், அவரை மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X