2026 மார்ச் 07, சனிக்கிழமை

வெல்லாவெளியில் வெடிபொருட்கள் மீட்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் , எஸ்.சபேசன்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டி வயல் காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த ரி56 ரகத் துப்பாகி மகசீன் 15, ரவைகள் 373 , மகசீன் பாக் ஒன்று  என்பன நேற்று (02) மீட்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளரால் குறித்த காணியில் பயிரிடுவதற்காக உழும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே, நிலத்தில் புதைதத்து வைக்கப்பட்டிருந்து இரு பொதிகள் வெளிவந்துள்ளதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .