Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 17 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம்
சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், அங்குள்ள மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்வதற்கான வழிவகைகள் குறித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல், நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
முன்னதாக சவூதி அரேபியா சென்ற கிழக்கு மாகாண ஆளுநர், றியாத்தில், சவுதி மன்னர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு, சவூதி அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுத்தருவதாக மன்னர் உறுதியளித்தோடு, கிழக்கு ஆளுநருக்கு விசேட விருது ஒன்றையும் இதன்போது வழங்கிவைத்தார்.
இதனையடுத்து, சவூதி அரேபிய இளவரசர் சவுத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத்துக்குச் சொந்தமான Exelentia Arabia நிறுவனத்தின் பிரதித் தலைவர் Giovanni Zappiaவுக்கும் கிழக்கு ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், சவூதி அரேபியாவிலும் அதற்கு வெளியிலும் பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்கின்ற மிகப் பெரிய நிறுவனமான Exelentia Arabia இலங்கையிலும் முதலீடு செய்வது தொடர்பாகவும், இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் முதலீடு செய்து, பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சவூதி அரேபியாவில் பல பில்லியன் டொலர்கள் முதலீடு செய்து அமைக்கப்படும் புதிய நகரத்துக்குப் பொறுப்பான இந்நிறுவனம், இலங்கையிலும் பாரிய முதலீடுகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago