Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 2.8 மில்லியன் ரூபாய் நிதியுதவி போதுமானதாக இருக்காதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்குப் பின்னரான நிலைமை குறித்து, இன்று (09) கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயங்களைக் கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களில், துண்டிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது நாளாந்த உணவுக்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
“குறிப்பாக, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிரான், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
“வெள்ளப் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக மேலதிக நிதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
18 minute ago