Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம், பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு - கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப்பிரிவில், வெள்ள அனர்த்தத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான உலர் உணவுப்பொருள்கள், மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமாரால் சந்திவெளி ஊடாக, திகிலி வட்டைக்கு, இயந்திரப் படகுகள் மூலமும் மிதவை (Raft) மூலமும் அனுப்பிவைக்கப்பட்டன.
கிரான் பிரதேசத்துக்குச் செல்லுகின்ற கிரான்பாலம் ஊடாக நீர் பெருக்கெடுத்து செல்வதால், அப்பாதை முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிக்கான மக்கள் போக்குவரத்து, இயந்திரப்படகுகள் மூலமாகவே சென்று வருகின்றனர்.
குறிப்பாக, கோரா வெளி, வெல்லாவெளி, குடும்பிமலை, முறுத்தானை, பூலாக்காடு, பிரம்படித்தீவு, வடமுனை, ஊத்துச்சேனை, பொண்டுகள்சேனை, வாகனேரி, புணானை, மேற்கு புலிபாய்ந்தகல் ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தால் இதுவரை 7,938 குடும்பங்களைச் சேர்ந்த 30,156 பேர், கிரான் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளனரென, பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .