Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி, மஞ்சந்தொடுவாயிலுள்ள உணவு விடுதியொன்றினுள் திடீரென வானொன்று புகுந்ததால், அவ்வுணவு விடுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (26) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியால் பயணித்த இந்த வான், திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து மேற்படி உணவு விடுதிக்குள் புகுந்துள்ளது. இதன்போது வானின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago