2025 மே 19, திங்கட்கிழமை

வேட்பாளரின் அலுவலகத்தின் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜனவரி 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது, இன்று (20) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கறுவப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே, இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் முன்பக்கமாகவுள்ள பதாகை எரியுட்டப்பட்டுள்ளது.

வீதிகளில் எரிந்துகொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டே, தமது அலுவலகத்தில் இருந்த பதாகையினை எரியுட்டியுள்ளதாக, வேட்பாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தமது வெற்றியை பொறுத்துக்கொள்ளமுடியாதவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் வேட்பாளர் காந்தன் தெரிவித்தார்.

இதன்போது, அங்குச் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான திருமதி செல்வி மனோகர் நிலைமையை பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X