2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விடுதலை செய்யுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

தங்களின் நிலைமையையும் தமது குடும்ப நிலைமையையும் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 09 தமிழ் அரசியல்க் கைதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்று புதன்கிழமை காலை சென்று பார்வையிட்டார். இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினரிடம் கைதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், 'உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் சோர்வடைந்து காணப்படுகின்றனர்' என்றார்.

'மேலும், குற்றம் செய்யாத தாம் சிறையில் வாடுவதாக அக்கைதிகள் கூறினர். தமது மனைவி, பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகின்றது. தாம் வெளியில் இருந்தால், ஏதாவது தொழில் செய்து பிள்ளைகளின் கல்வியைக் கவனிப்போம். தமது விடுதலைக்காக சட்டத்தரணிகளுக்கு கொடுப்பதற்கு தங்களிடம் பணம இல்லையெனவும் அக்கைதிகள் கூறினர்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X