2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதியை விட்டு விலகிய வாகனம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தெருவோரத்திலிருந்த வீட்டுக்குள் புகுந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை கொம்மாதுறையில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டுக்கும் வாகனத்திற்கும் சிறிது சேதமேற்பட்டுள்ளது.

கொம்மாதுறை உமா மில் வீதியிலிருந்து சென்ற வாகனம் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையை ஊடறுத்து நேராக வீட்டுக்குள் சென்று மொதி நின்றுள்ளது.

தெய்வாதீனமாக காயங்களோ உயிரிழப்புக்களோ ஏற்பட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X