2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலையில் நேற்றுத் திங்கட்கிழமை (22) பிக்கப் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் கல்லடிப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.தனா (வயது 46) என்பவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த பிக்கப் ரக வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.

இவர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்றவராகும்.

இதேவேளை, இந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியவுடன் அதில் பயணம் செய்தவர்கள் தம்வசம் எடுத்துச்சென்ற 6க்கும்  மேற்பட்ட சாராயப் போத்தல்கள் வீதியில் சிதறியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சாராய போத்தல்கள் மற்றும் விபத்துக்குள்ளாகிய மோட்டார் சைக்கிள் மற்றும் பிக்கப் வாகனத்தை  பொலிஸ்  நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X