Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - ஏறாவூர் நெடுஞ்சாலை தன்னாமுனையில் செவ்வாய்க்கிழமை (03) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு, களப்பு வீதியைச் சேர்ந்த வடிவேல் அன்னலெட்சுமி (வயது 72) என்பவர் பலியாகியுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு நேர உணவுக்காக இடியப்பம் வாங்கச் சென்றபோது, ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில், பெண் மோதுண்டுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த பெண்ணை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்த போதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago