Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
சகல பிரதேசங்களுக்கும் வேறுபாடுகள் காட்டாது உதவுவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கின்றது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாகச் செயற்பட்டால் நிச்சயமாக இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை மிக விரைவில் செய்து முடிக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் கீழுள்ள போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சாதனையாளர் பாராட்டு விழா வியாழக்கிழமை (08) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'போரதீவுப்பற்று பிரதேசம் கல்வி, நிர்வாகம் சார் மற்றும் ஏனைய பல்துறை சார்ந்த பிரச்சினைகளுடன் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாட்டத்தில் பட்டிருப்புத்தொகுதி தனித்துவமான ஒரு பண்பையும் கலாசாரத்தினாலும் வரலாற்றினாலும் தனித்துவமான ஒரு பண்பையும் காணப்படுகின்றது. இந்தத்தொகுதியானது தமிழர்களின் பால் பற்றுறுதி மிக்கதாகவும், அடையாளப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றது.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சேவைகளை ஆற்றுவதற்கு மாட்ட நிர்வாகத்திற்கு இப்பிரதேசத்திற்குள்ளேயே பல தடைகள் இருக்கின்றன. மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்று தலைமைத்துவத்துக்குக் கீழ் செயற்படுத்துவதற்குரிய பிரதேச நிர்வாகத்தை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை.
இப்பிரதேசத்தில் கடமை புரியவரும் அதிகாரிகள், சேவையாற்ற முடியாமலும், மக்களோடு ஒரு இணைந்த மாவட்ட செயலகத்தினூடான ஒரு பிரதேச நிர்வாகத்தோடு கடமையாற்ற முடியாமலிருப்பதும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலைiமாகும்.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலமையினை தீர்ப்பதற்கு முனைகின்றபோதெல்லாம், வீண்கதைகளைக் கட்டி, அரசியல் செல்லாக்குகளைப் பிரயோகித்து மாட்ட நிர்வாத்தைச் சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரதேச நிர்வாகத்தை நான் கொண்டிருக்பின்றேன். இதன் காரணமாகத்தான் இப்குதிக்கு எம்மால் பல சேவைகள் மேற்கொள்ள முடியாமலிருக்கின்றது.
ஏனைய பிரதேசங்களிலிலிருந்து நாம் பல அடைவுகளைப் பெற்றுக்கொள்கின்ற போதிலும் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு, வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதிலும், சவாலை எதிர்கொண்டிருக்கின்றோம். தவறான பிரச்சாரத்தின் மூலம் இப்பகுதி மக்களின் தேவைகளும் அவற்றிக்கான அடைவுகளும் தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு அனைத்து சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்' என்றார்.
இதுதான் ஆசிரியம் எனும் நவீன மேடைக்கூத்து ஒன்று வியாழக் கிழமை மேடையேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago