2025 மே 07, புதன்கிழமை

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரிக் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விமல் என்று அழைக்கப்படும் அழகையா செனவிரட்ன (வயது 38) என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மகிழடித்தீவிலிருந்து தாந்தாமலை, நாற்பதுவட்டைப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்தபோதே, இவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், இவரது சடலம் பாலத்துக்கு கீழிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 08.30 மணியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலயங்களில் 100.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார்; தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X