2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெள்ளப்பெருக்கைத் தடுக்க பெருந்திட்டம் அமுலாகும்

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைத்து விவசாயத்தை மேம்படுத்தவும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் மாவட்டம் முழுவதற்குமாக குடிநீர் விநியோகிக்கவும் கூடியதான பெருந்திட்டமொன்றை அடுத்தாண்டு தொடங்கவிருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வருடாவருடம் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பின் பாரிய குளங்களில் ஒன்றான உறுகாமம் குளமும் அதற்கருகே அமைந்துள்ள வடிச்சல் குளமும் இணைக்கப்படவுள்ளன.

இவ்விரு குளங்களையும் இணைப்பதற்கான பாரிய நீண்ட காலத் திட்டம் ஒன்றுக்காக இவ்வாண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஆரம்பத் திட்டவரைவு மற்றும் ஆய்வு வேலைகளுக்காக 250 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

“உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல நகரங்கள் மற்றும் வாகரை வரையிலான கிராமங்களிலுள்ள 5 இலட்சம் குடியிருப்புக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், வருடம் இந்த மாவட்டம் எதிர்கொள்கின்ற வெள்ளப் பெருக்குப் பதிப்புக்களை முற்றாகவே இல்லாமலாக்க முடியும் என்றும் சாத்திய வள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏறாவூர் தொடக்கம் சித்தாண்டி பகுதி எதிர்நோக்கும் வெள்ள நிலைமை சீர் செய்யப்பட்டுவிடும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, “இவ்விரு குளங்களையும் இணைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைத்து சதாகாலமும் தங்கு தடையின்றி நீர்ப்பாசனம் செய்ய முடியும்” என மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல். ஜவ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X